சுஸ்ரீ/விஸ்வாசம்

புருஷோத்தமன், ஸ்டெல்லாவை காதலிச்சுதான் கல்யாணம் பண்ணிக்கிட்டான்.ஸ்டெல்லா ஒரு அழகின்றதுக்காக மட்டுமில்லை.
அவனுக்குத் தெரியும் அழகுன்றது ஒரு வயசு வரைதான் பணம்தான் இறுதிவரைன்னு.பரம்பரை பணக்காரர் ஜான் ஆப்ரகத்தோட ஒரே பொண்ணு
அளவற்ற ஆஸ்திக்கு ஒரே வாரிசுனு தெரிஞ்சுதான் ஸ்டெல்லாவுக்கு வலை விரிச்சான். பிறந்ததிலிருந்து அம்மா இல்லாததால் வெகுளியான ஸ்டெல்லா எளிதில் புருஷோத்தமன் விரிச்ச வலையில் விழுந்தாள்.புருஷோத்தமனோட தந்தை
ஜான்ஆப்ரகத்தோட கணக்கு வழக்குகளைப் பாக்கறவர்ன்றதால புருஷோத்தமனோட பிளான் எளிதாக இருந்தது.
ப்ளூட்டோ ,ஸ்டெல்லாவின் செல்ல நாய்க்குப் புருஷோத்தமனை கண்டால் ஏனோ பிடிக்கலை அவளோட பூனை புஸ்ஸிக்கும்தான் அவனைப் பாத்தாலே உர்ர்ன்னும்.எப்படியோ ஸ்டெல்லாவோட அப்பா புருஷோத்தமனை மருமகனாக ஒத்துக் கொண்டு விட்டார்.கல்யாணம் உள்ளூர் சர்ச்சில், பங்களா கார்டனில் அமர்க்களமான விருந்துனு முடிஞ்சது.ஸ்டெல்லாவுக்கு புருஷ் மேல அளவு கடந்த அன்பு.ஆனா புருஷ்க்கு ஸ்டெல்லாவுக்கு முன்பிருந்தே சஞ்சனாவோட பழக்கம் இருந்தது.சஞ்சனா ஒரு ஏழை விதவை, மிகச்சிறிய வயசுலயே கணவனை இழந்தவள். அவளுடைய இளமை, சிறு வயது,
புருஷ்க்கு அவளைக் கவர அதிக நேரமாகலை.
வருஷங்கள் ஓடக் கேக்கவா வேணும், ஜான் ஆப்ரகம் இல்லை
சொத்து பூரா ஸ்டெல்லா பேர்ல.அவளுக்கு ஏதாவது ஆனால்தான் சஞ்சனாவும் தானும் சந்தோஷமா இருக்க முடியும்னு புருஷ்கு தெரியும்.
திட்டமிட்டான் அவளை ஒழிக்கப் பலமுறை, ஆனால் ஒவ்வொரு முறையும் ஏதோ நேரிட்டு நூலிழையில் ஸ்டெல்லா தப்பித்து வந்தாள்.கடசியாக ஏகப் பட்ட தூக்க மாத்திரைகளை ஸ்டெல்லாவோட ஃபேவரைட் பழ ரசத்தில் கலந்து வைத்தான்.அவள் குடிக்க எடுத்தபோது ப்ளூட்டோ பாய்ந்து தட்டி விட்டது. கட்டிலின் கீழே படுத்திருந்த புஸ்ஸி ஆவலோடு அதை நக்கி பட்னு உயிரிழந்தது.
ஸ்டெல்லா ப்ளூட்டோவை கட்டிக் கொண்டு அழுதாள். திடமான முடிவெடுத்தாள்.புருஷைக் கூப்பிட்டு இனியும் நீ இங்கே தேவையில்லை என் உயில் படி நான் செத்தாலும் சொத்து அனாதை விடுதிக்குதான் போகும், நீ என் வாழ்க்கையிலிருந்து போய் விடு விக்கி விக்கி அழுதாள்.ப்ளூட்டோ ஆதரவாய் தன் முகத்தை அவள் மடியில் புதைத்துக் கொண்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன