
நீங்கள் பதிப்பகத்துறைக்கு வர காரணமென்ன? அதற்கு முன்பாக என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?" நான் இத்துறைக்கு வருவதற்கு முன்பாக ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் பிரெஞ்சு மொழி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தேன். அப்போது பிரெஞ்சு மொழி எழுத்தாளருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதைத் தெரிந்துகொண்டபோது தமிழில் எத்தனையோ நல்ல எழுத்தாளர்கள் இருந்தும் ஏன் அவர்களுக்கு நோபல் கிடைக்கவில்லை என்ற கேள்வி எழுந்தது. லா.ச.ரா, மெளனி, புதுமைப்பித்தன் போன்ற முன்னோடி எழுத்தாளர்களில் தொடங்கி இப்போது மிக நன்றாக எழுதும் புதிய இளம் எழுத்தாளர்கள்வரை இவர்களின் படைப்புகள் ஏன் கவனிக்கப்படவில்லை என்று வருத்தமாக இருந்தது. அப்போதுதான் இவற்றையெல்லாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிடலாமென்ற எண்ணம் தோன்றியது.
அப்போது என் நீண்ட நாள் குடும்ப நண்பர் ராம்ஜியுடன் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். அப்போது நண்பர் எழுத்தாளர் சாருநிவேதிதாவைச் சந்தித்து இதுகுறித்துப் பேசியபோது அவரும் ஆதங்கப்பட்டுப் பேசினார். தமிழில் வெளிநாட்டு எழுத்தாளர்கள் மார்க்வெஸ், பாவ்லோ கொய்லோ, போன்றோரின் நூல்களை உடனுக்குடன் மொழிபெயர்த்து வெளியிடும் நாம், நம் எழுத்தாளர்களின் படைப்புகளை மொழிபெயர்த்து உலக மக்களிடம் கொண்டு சேர்ப்பதில்லை என்றதும் சாருவின் எக்ஸைல்' நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதை வெளியிட பல பதிப்பகங்களுக்கு ஏறி இறங்கினோம். யாரும் போட முன்வரவில்லை. உடனே ராம்ஜீநாமே ஏன் ஒரு பதிப்பகம் ஆரம்பித்துச் சாருவின் அனைத்து நூல்களையும் கொண்டு வரக் கூடாது?’ என்று சொல்லவே ஏற்கெனவே எனக்குள்ளிருந்த ஆசை நிறைவேறும் இடத்துக்கு வந்ததாக உணர்ந்து உடனே ஜீரோ டிகிரி பப்ளிஷிங் என்ற பெயரைச் சூட்டி சாருவின் அனைத்து நூல்களையும் கொண்டு வரும் தீவிர முயற்சியில் இறங்கி வெற்றிகரமாகக் கொண்டு வந்துவிட்டோம். பதிப்புப் பணியில் முழுமையாகக் கவனம் செலுத்த, பிரெஞ்சு ஆசிரியர் பதிவியிலிருந்து விலகினேன்.
எனக்குக் கிடைத்த அரசு வேலையையும் கைவிட்டேன். எல்லோரும் என்னைப் பைத்தியம் என்றனர். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் என் வாழ்வில் நான் செய்ய விரும்பியதைச் செய்ய நினைத்தேன். வாழ்வில் பணம் பொருட்டல்ல. விருப்பப்பட்ட வாழ்வை நாம் நினைத்த வழியில் செயல்படுத்துவதுதான் சிறந்தது என்று இந்தப் பதிப்பகத் துறையில் என்னை நிலைநிறுத்த ஆரம்பித்துள்ளேன்.

சில நேரங்களில் துணிச்சல் அருமையாக கை கொடுக்கும். நல்ல விஷயம் என்றால் துணிச்சல் தேவை தான்.
வாழ்த்துக்கள் சகோதரி.