சுஸ்ரீ/கரைஞ்சு போகாதே கனகு

கனகு ஞாபகப் படுத்தினா கணேசுக்கு,”ஞாபகம் இருக்கா ஸ்கூல் படிக்கறப்ப நான் மழைல நனையக் கூடாது, வெல்லம் போலக் கரைஞ்சு போவேன்னு என் தலைல ஒரு நீலக் கலர் பாலிதீன் பையை மாட்டி விட்டே.நான் பிடிவாதம் பிடிச்சேன் எனக்கும் உன் தலைல இருக்கற மாதிரி மஞ்சள் கலர் பைதான் வேணும்னு.நீ உடனே யோசிக்காம உடனே உன் தலைல போட்டிருந்த மஞ்சப் பையை எனக்கு மாட்டி விட்டே. அந்தப் பிரியம் எங்கே போச்சு இப்ப”
“அது என் கனகு நனையக் கூடாது, அந்தக் களங்கமில்லா முகம் கலங்கக் கூடாதுன்றதால”
“ஓ இப்ப நான் பெரியவளாயிட்டதால அந்தப் பாசம் போயிடுச்சோ”
“வீட்ல உள்ளவங்க எதிர்ப்பையெல்லாம் மீறி உன் பின்னால சுத்தறேனே அதனால இப்படி பேசறயா”
“அதில்லைப்பா, தலைல யோசிக்காம மஞ்சள் பிளாஸ்டிக் பையை மாட்டின உனக்கு
ஒரு மஞ்சள் கயிறை கழுத்துல மாட்ட இன்னும் தைரியம் வரலையா, இல்லை மனசு வரலையா”
“ஏய் பிள்ளை, மஞ்சத்தாலி கட்டிட்டா போறுமா உன்னை வச்சி காப்பாத்த வேண்டாமா?நம்ம குழந்தையை நல்லா வளக்க வேண்டாமா?சீக்கிரமே அந்த ஃபேக்டரி வேலை கிடைச்சிடும் அப்பறம் என் கனகு ராணி எனக்கேதான், ரெண்டு மாசம் பொறு.”
“போங்க வெக்கமில்லாம அதுக்குள்ளே குழந்தையெல்லாம் பேசிட்டு”கன்னம் சிவக்க அவன் நெஞ்சில் செல்லமா குத்தினாள்.