
நீலகிரித் தைல புட்டிகள் அடுக்கப்பட்ட அட்டைப் பெட்டியை அந்த அங்காடி முதலாளியிடம் கொடுத்தாள் பட்டம்மாக் கிழவி.
சரியான நேரத்துக்கு வந்துட்ட பாட்டி. இப்ப சீசன் வேறயா நம்ம ஊரு தைல புட்டிக்கு மவுசு கூடிப் போச்சு. வாங்கி உடனே ஷோகேஸில் அடுக்கிய முதலாளி வேணுகோபால் நாளைக்கு கொஞ்சம் கூடக் கொண்டு வா.
தலையை ஆட்டியவள், ‘கொஞ்சம் முன் பணம் கொடுக்க முடியுமா சாமி., ஆசுபத்திரிக்கு போகணும்.’
மதியம் உணவு இடைவேளைக்காகக் கடையை மூடிய வேணு தன் வீட்டுக்குச் செல்லும் வழியில் நின்றிருந்த பட்டம்மாவிடம், என்ன இங்க நின்னுக்கிட்டு இருக்க.டாக்டரைப் பார்க்கணுமின்னு சொன்னியே….
என் பேத்திக்குதான், பார்த்தாச்சு தம்பி, ஊசி போட்டு மருந்து கொடுத்திருக்காக…வேணு திருதிருவென விழிக்க…
ஏ செல்லாயி வாப்புள்ள வீட்டுக்கு வெரசாப் போயி சாப்பிட்டு மருந்து எடுத்துக்கோணுமில்ல.
‘வாரோம் தம்பி….சில வருஷங்களுக்கு முன்ன நடந்த நிலச்சரிவு மொத்தக் குடும்பத்தையும் சூறையாடிடுச்சு.
இப்போ எனக்குச் செல்லாயியும், அவளுக்கு நானும்தான் ஆதரவு… ‘சொல்லிக்கொண்டே தன் வரையாட்டை ஓட்டிப் போனாள் பட்டம்மாள்.

One Comment on “நாபா.மீரா/செல்லாயி”