அமுதசுரபி/பெற்றோர் கவனத்திற்கு…

கர்நாடகாவில் அண்மையில் நடந்த உண்மைச் சம்பவம் முதிபோர்களுக்கு
ஒரு படமாகும்.
களைவனை இழந்த வயதான தாய், தனது பல கோடி ரூபாய் மதிப்புன்ன வீட்டைத் தன் பெண்ணுக்கும் பிள்ளைக்கும். ‘தானப் பத்திரமாக (Gft: Del) எழுதிக் கொடுத்துவிட்டார். அவர்கள் தங்கள் அம்மாவைக் கடைசி வரை காப்பாற்றுவதாக உத்தரவாதமும் வாய்மொழியாகக் கொடுத்துள்ளனர்.
ஆனால், சொத்து கைமாறிய சில நாட்களிலேயே பெண் மற்றும் பிள்ளை குணத்தில் எதிர்பாராத மாற்றத்தைத் தாய் உணர்ந்துள்ளார். தாயின் முதிய வயதைக் கருத்தில் கொள்ளாது வீட்டை விட்டே துரத்தி விட்டார்கள் அவர்கள். பல கோடி ரூபாய் சொத்துக்கு உரிமையாளராக இருந்த தாய், சில நாட்களிலேயே நடுத்தெருவுக்கு வந்துவிட்டார்.
தாய், நியாயம் கேட்டு நீதிமன்றம் சென்றார். சொத்தைப் பெற்றுக்கொண்ட மகளும் மகனும் சொன்ன வாதம், நீதிமன்றத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
“தாயிடமிருந்து சொத்தைப் பெறும்போது ‘தானப் பத்திரத்தில்’ (Gift Deed), அம்மாவை நாங்கள் பராமரிக்க வேண்டும் என்ற எந்தவொரு நிபந்தனையோ விதியோ எழுதி எங்களால் கையெழுத்திடப் படவில்லை. சட்டப்படி பத்திரத்தில் எழுதப்படாதபோது நாங்கள் அவரைப் பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றார்கள் அவர்கள்!
இந்த மனிதாபிமானமற்ற வாதத்தைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்த நீதிமன்றம் இறுதியில் அதிரடியான ஒரு தீர்ப்பை வழங்கியது:
பெற்றோரைக் கவனித்துக் கொள்வது குழந்தைகளின் தார்மீகக் கடமை. அதற்குச் சொத்துப் பத்திரத்தில் “நான் என் பெற்றோருக்குச் சோறு போடுவேன்” என்று தனியாக எழுதி வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
பெற்றோரைத் தவிக்கவிடும் பிள்ளைகளுக்குச் சொத்தைப் பெறும் உரிமையில்லை, தாய் எழுதிக் கொடுத்த ‘தானப் பத்திரத்தை’ நீதிமன்றம் ரத்து செய்கிறது என்பதே தீர்ப்பு. ஏமாற்றிப் பிடுங்கப்பட்ட அத்தனை சொத்தும் மறுபடி தாய்க்கே சொந்தமாகிறது என்றும், மகளும் மகனும் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
பெற்றோரைத் தவிக்கவிடும் வாரிசுகளுக்குச் சிறைத் தண்டனை வழங்கவும் சட்டத்தில் இடம் உண்டு என்பதைப் பெற்றோரும் வாரிசுகளும் அறிய வேண்டும்.
நல்ல குழந்தைகள், பெற்றோர் உயிரோடு இருக்கும்போதே அவர்கள் சிரமப்பட்டு சம்பாதித்த சொத்து தங்களுக்கு வந்துசேர வேண்டும் என்று நினைக்க
மாட்டார்கள்.
பெற்றோர் குழந்தைகளை நம்புவதிலும் அவர்கள்மேல் பாசம் செலுத்துவதிலும் தவறில்லை. ஆனால் தங்கள் சொத்து தங்கள் காலத்திற்குப் பிறகு குழந்தைகளுக்குச் சேருமாறு செய்வதே பாதுகாப்பானது என்பதைப் பெற்றோர் உணர்வது அவசியம்.

பின்குறிப்பு :

அமுதசுரபியில் ஜூலை 2026 ல் வெளிவந்த தலையங்கக் கட்டுரை.
இந்தக் கட்டுரையில் நடந்த நிகழ்ச்சி என் குடும்பத்தைச் சார்ந்த ஒருவருக்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதைப் படித்த எனக்குத் திகைப்பாக இருந்தது.

One Comment on “அமுதசுரபி/பெற்றோர் கவனத்திற்கு…”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன