நாபா.மீரா/சுரப்பிகள்

நடுக்குத்தகை கிராமத்திலிருந்து கிட்டத்தட்ட ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருந்த பக்கத்து டவுனில் தானியக் கிடங்கு கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்யும் வேலை ராக்காயிக்கு.
இந்தா பிடி ராக்காயி…காவலாளி வேலவன் கொடுத்த மூட்டையைக் கவனமாக வாங்கி தான் கொண்டு வந்திருந்த பழைய புடவையில் கட்டிக் கொண்டாள்.
தானியங்களை இயந்திரத்தில் போட்டுப் புடைக்கும்போது வரும் தவிட்டில் ஒரு பகுதி எடுத்து ராக்காயியிடம் கொடுப்பது அவன் வழக்கம்.
எங்க கிராமத்துல இருக்கிற சவலை மற்றும் சினைமாடுகளுக்கு கவனிப்பார் யாருமில்லை வேலா… கொஞ்சம் பார்த்துக்கொடு.நீயும் உங்குடும்பமும் நல்லா இருப்பீங்க!
செல்லம்மா..குரல் கொடுத்த ராக்காயியிடம்…என்ன ஆயா மேலுக்கு சொகமில்லையா சாப்பிட ஏதாச்சும் வாங்கியாறவா…
சுருக்குப் பையைத் திறந்து பணம் நீட்டியவாறே, நாப்பட்டினியா இருந்தாப் பரவாயில்லைம்மா.இந்தப் பணத்துல புண்ணாக்கு வாங்கியாரையா
எம்புள்ளைங்க என்னை நம்பிக் காத்திருக்கும்…
அப்பொழுது மூச்சிறைக்க ஓடி வந்த வேலவன், ராக்காயியிடம் தவிட்டுப்பையைத் திணித்தான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன