சுஸ்ரீ/மானோ இது மயிலோ

இளமாறன் முதுகலை பட்டம் பெற்று அமெரிகாவில் நல்ல வேலையில் இருந்தான்.அவன் திடீரென வேலையை உதறி தன் கிராமத்துக்குத் தந்தைக்கு உதவியாக விவசாயம் செய்ய வந்தது ஆச்சரியம்தான்.
அவர்களுடைய மாந்தோப்பு அங்குத் தினம் உலவும் மயில் என வாழ்க்கை வாஷிங்டனை விடச் சுவாரஸ்யமாக இருந்தது.
அன்று காலைத் தோப்புக்கு வந்த இளமாறன் ஒரு நிமிடம் அசந்து நின்றான்,
மயில் அழகா, இந்தப் பெண் மான் அழகா!ஒரு மரத்தில் சாய்ந்து கொண்டு ஒயிலாக எதிரில் இருந்த குளத்து நீரில் மயிலும் தானும் சேர்ந்து தெரிவதை ரசித்த மாலதி, யாரோ தன்னைப் பார்ப்பதை உணர்ந்து சட்டெனத் திரும்பினாள்.
யாரோ ஒரு விவசாயி, முகத்தைச் சுளித்துக் கொண்டு தன் மாமா வீட்டிற்கு டாக்டர் மாலதி வீடு திரும்பினாள். இளமாறன் பி.டெக், எம்.எஸ்.தான் தன்னை மணமுடிக்க காத்திருக்கிறான், தன்னை பெண் பார்க்க மாலை வரப்போறான் என்பது அப்போது அவளுக்குத் தெரியாது.

One Comment on “சுஸ்ரீ/மானோ இது மயிலோ”

  1. வழக்கம்போல் சுவையாக எழுதியுள்ளார்.இவருக்கு இது கைவந்த கலை .பாராட்டுக்களும் வணக்கங்களும் .அன்புடன் பத்ரி.

Comments are closed.