ஷைலஜா /சிட்டுக்குருவிகள்

அம்மன்கோவிலை ஒட்டிய மரத்தில் அந்தக் குருவிகள் கூடு கட்டி இருந்தன.
குஞ்சுக் குருவிகளுக்கு இறக்கைகள் முளைத்து விட்டன…
அவைகளையும் அழைத்துக் கொண்டு இன்று
இரைக்குப போக வேண்டும் என்று தாய்க் குருவி சொல்லவும் தந்தை குருவி கவலைப்பட்டது .
“பத்து இருபது அரிசி மணி கிடைத்தால்அதுவே நம் குழந்தைகளுக்குப் பசி தணிக்கும். .கோவிலுக்குவரும் மனிதர்களைப் போல நாமும் இந்த அம்மனை வேண்டிக் கொண்டு புறப்படுவோம் “என்றது.
தாய்க்குருவி”சர்” என்றது.
ரேஷன் கடையிலிருந்து தலையில் சுமந்து வந்த அஞ்சலை யின் அரிசி மூட்டையில் இருந்த சிறு விரிசலை அவள் தலைக்கு மேல் பறந்து கொண்டிருந்த தாய்க் குருவி பார்த்து விட்டது.
தன் குஞ்சுகளை முதலில் மூட்டையில்மெல்ல இறங்கி அரிசியைக் கொத்தி சாப்பிட சொல்லியது.
” குழந்தைகளுக்கு அந்த அம்மன் வழிகாட்டிட்டா” என்றன மேலே பறந்து கொண்டிருந்த அப்பா-அம்மா குருவிகள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன