
ஏய்.மயிலு ஏண்டி மாமனை இப்படித் தவிக்க விடுற. சோலியெல்லாம் போட்டுட்டு உன்னைப் பார்க்கோணுமின்னு ஓடி வந்தா…இப்படித் திருப்பிக்கிட்டு நிக்கியே.
வேலுச்சாமியின் புலம்பலில், ஒரு சிலு சிலுப்பிக் கொண்டு ஒயிலாகத் திரும்பிய மயிலரசி…
ஆமா, பெரிய சோலி.. அடுத்தவன் குடியக் கெடுக்கிறதெல்லாம் ஒரு பொழப்பா மாமா!
ஏய் என்ன வாய் நீளுது.தொலைச்சிப்புடுவேன்.
பார்த்தியா மாமா, அரசு நடத்துற டாஸ்மாக் வேலையா இருந்தாலும் குடிக்குற பழக்கமே இல்லாத நீயே இப்புடிப் பேசுற…
அப்பக் குடிக்குறவன் குடும்ப நெலைமையெல்லாம் இன்னும் மோசம் தானே..
அதுனாலதான் சொல்லுறேன் …நம்ம கண்ணாலத்துக்கு முன்னாடியே நீ இந்த வேலையை விட்டு ஒழிச்சிடு. அடுத்தவன் குடி கெடுத்து வாழுற பொழைப்பு நமக்கு வேணாம்….
மயிலரசியின் விழிகளில் தழும்பிய கண்ணீரைத் துடைத்த வேலுச்சாமி,
அரசு நெறைய மதுக்கடைகளை மூடுது இல்ல, இந்தச் சரியான சமயத்துல மாத்து வேலைக்கு எழுதிக் கொடுத்திட்டேன்.
நல்ல சேதியப் பகிர வந்தா இப்புடி கடுப்பேத்துறியே பிள்ள… என்ற மாமன்காரனை கட்டிக் கொண்டாள் மயிலரசி.

Very nice