
“மாதவி பொன் மயிலாள் தோகை விரித்தாள்…”பாடல் டி எம் எஸ் அவர்கள் கம்பீரக் குரலில், சிவாஜி பத்மினி அவர்களின் பாவ ரச நடிப்பில் அந்தத் தோட்டம் சிறகடித்துக்
கொண்டிருந்தது.
தொலைக்காட்சி பெட்டியில் ஆடலுடன் பாடலைக் கேட்டு அந்தப் பொதுஜன பார்க்கில் அமர்ந்து ரசித்தாள் நளினி.
மாமரம் பூத்து குலுங்கி அந்தச் சுற்றுப்புறம் எல்லாம் மனதை அள்ளிக் கொள்ளை கொள்ளும் வாசனை.
அவளுடன் அருகில் இருந்த மயில் மழை வரும் என்று அறிவுறுத்தியது.
சற்று தொலைவில் சிறிய குளம்.அதில் அன்னப் பறவை நீந்தி விளையாடிக் கொண்டிருந்தது.
நளினிக்கு திடீர் என்று வேலவன் நினைவு வந்தது.
இரண்டு நாட்களாகப் பார்க்கு பக்கம் வரக் காணோம்.
இந்தப் பாடல் முடிந்தவுடன் கிளம்பி போய்ப் பார்த்து விட்டுத் தன் வீடு போய்ச் சேரலாம் என்று நினைத்துப் பாடலைத் தொடர்ந்து ரசித்தாள் நளினி.
திடீர் என்று மின்சாரம் அணைந்து, கும்மிருட்டு. ஒரு டார்ச் வெளிச்சம் கண்ணில் தெரிந்தது.
பயப்படாதே! நான் தான் இரவு டூட்டி என்று சொல்லிக் கொண்டு தலையில் முண்டாசும் கையில் கம்புமாக அருகில் வந்து நின்றான் வேலன்.
இருட்டில் ஒருவரை ஒருவர் அணைத்த நிலையில் சட் என்று மின்னியது வெளிச்சம்.
