எஸ். கோபால கிருஷ்ணன் /’மயிலாத்தாள் மனசுல யாரு?’

எப்போதும் மயில் அவளுடன் இருப்பதால் அவளுக்கு மயிலாத்தாள் எ‌ன்று பெயரா என்பது தெரியாது. அவளும் வேலப்பனும் ஒரே தோட்டத்தில் வேலை செய்கிறார்கள். முதல் முறையாக அவனைப் பார்த்தவுடன் அவள் மனதில் அவன்! அழகால் மட்டும் இல்லை. பெண்களிடம் கண்ணியமாகப் பழகுவதால், நல்ல பாம்பைக் கொல்லாமல் விரட்டிய துணிச்சல் எல்லாவற்றாலும் தான். அவள் மனதில் அவன் இருக்கிறானா?எல்லாரிடமும் போல அவளிடமும் பழகுகிறான். அவனை எப்படி கவர்வது?
அழகு சேலை, கொண்டையில் பூ, மயிலுடன் ஒயிலாக அவள்! கடைக்கண் பார்வையுடன்! மனதில் ஆயிரம் ஆசை.
தோட்ட வேலைக்கு ஏற்ற உடையுடன் அவன். அருகில் வந்து “உன்னிடம் எனக்குப் பிடித்ததே உன் எளிமை தான். எதுக்கு இந்த அலங்காரம்? “
காதல் பார்வையுடன் அவன் சொன்னதும் அவள் மனசுக்குள் மத்தாப்பு.
நாணத்தில் தலை குனிந்தாள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன