
சிவப்பு ரவிக்கைக்கு எடுப்பாய் சந்தன நிறப் புடவை அணிந்து… மல்லிப்பூ சூடி… தேவதைபோல… தோட்டத்தின் மத்தியில், மயில்களுடன்… ஒயிலாக நின்றாள் குயில்.
காவல்காரன் ஒளிந்து நின்று பார்த்தான். சுற்றிலும் யாரும் இல்லையென உறுதி செய்தவன், அவளை நெருங்கினான்.
அவள் எப்போதோ தெரியாமல் செய்த சிறு தவறைச் சுட்டிக்காடி பயமுறுத்தி, தன் இஷ்டத்திற்கு இணங்க வைத்துவிட்ட மகிழ்ச்சி அவனுக்கு.
“நெற்றியெல்லாம் பச்சை வந்துவிட்டது… இனி நீ பிழைக்க முடியாது. தொற்று நோய் இது… கவனமாக வீட்டிலயே தனியா இரு. உன் எச்சிலோ… வியர்வையோ பட்டா… அவங்களையும் காப்பாத்த முடியாது குயிலு” மருத்துவர் திட்டவட்டமாகக் கூறினார்.
வெறியுடன் வந்த காவக்காரனை பழிவாங்க, ஒயிலாக நின்றாள் குயில்.
