
லண்டன்ல வேலை பாக்கறேன் நல்ல சம்பளம் நல்ல வீடு
ஆனா பள்ளத்தூர்ல பிறந்து வளந்து
படிச்ச காலத்துல எங்க வீடு ஃபேமஸ். என்னை மச்சு வீட்டு சேகர்னுதான் கூப்டுவாங்க.
அந்த வீட்டை நினைச்சவுடனேயே கண்ல தண்ணி. ரெட்டை மாடி, மதுரை மகால் தூண் மாதிரி கிண்ணுனு தூண்கள் பர்மாதேக்குல வாசக் கதவு.
ஸ்கூல் ஃபைனல் படிக்கறப்ப பருவதத்தோட ஓடிப் பிடிச்சு விளையாடின அந்த நாள். “சீப்போடா, பேட் பாய் அப்படியெல்லாம் தொடக் கூடாது”
“நீ மட்டும் முதுகைப் பிடிச்சு தள்ளினே.”
“ஆமாம் அது அப்படித்தான் “
என் தம்பி அவளைத் தள்ளி விட்டது பாவாடை கிழிந்து முழங்கால்ல ரத்தம் வந்தது. நான் பதறிப் போய் மண்ணை சலிச்சு காயத்துல தூவி ஊதி விட்டது. “போடானு” அவ ஓடினது. என் தம்பியை நான் நைய்யப் புடைத்தேன் அன்று.
அந்தத் தம்பி ,இப்ப “அந்த வீட்டை வித்துட்டேன் அண்ணானு”போன்ல சொன்னதுல இருந்து கலங்கிப் போய் உக்காந்திருக்கேன்.
