
செல்லி அந்த மாணவியர் உணவு விடுதியிலிருந்து வெளியேறி நடந்தாள். அலுமினிய கூடை நிரம்ப சப்பாத்திகளும், வெந்த முட்டைகளும்.
நேற்று விடுதிதின கொண்டாட்டத்திற்காக; சமைத்த அசைவ உணவு மாணவியர் விருப்பமாயிருந்தது;
சப்பாத்தியும் அவித்த முட்டைகளும் விரும்பா உணவாகி விட்டன. வெயிலுக்கு முன் எடுத்துப் போனால் காலனியில் இருப்பவர்களுக்கு இன்றைய உணவாகும். அவித்த முட்டைகள் அங்கமுத்துவின் கைப்பக்குவத்தில் அரை மணியில் சால்னாவாக மாறி இன்றையபொழுது பசியின்றி இனிதே போகும்.
போகும் வழியில் உணவின் வாசத்திற்கு சுற்றிப் பறக்கும் புறாக்களும், சிட்டுகுருவிகளும், அவளிடம் ஏதோ பேசிக் கொண்டே வந்தன. அவளும் அவைகளுடன் பேசிக்கொண்டே வந்தாள்.
காலனியில் கூடைநிறைய சப்பாத்திகளையும் முட்டைகளையும் பார்த்த கண்கள் பசியிலும் ஆசையிலும் விரிந்தன
அங்கமுத்து முதலில் பறவைகளுக்குப் பங்கீடு செய்தாள். ” பாவம் நம்மை மாதிரி பாவப்பட்ட சன்மங்க;” என்றபடி.
