விஜயலக்ஷ்மி கண்ணன் /கயிறு இல்லாத கட்டு

அப்பா இறந்தே பத்து வருடங்கள் ஆகிவிட்டன.
திடீர் என்று நேற்று வந்த என் அண்ணன் மகனின் கடிதம் தான் என்னை இந்த ஊருக்கு அழைத்து வந்து நானும் என் வீட்டைப் பார்க்கிறேன்.
100 வருஷம் பழைய வீடு.
எத்தனை எத்தனை உணர்வுகளைத் தாங்கி நிற்கிறது இந்த வீடு.அப்பாவுக்கு முன் தாத்தா கட்டி வாழ்ந்த வீடு.சீராட்டங்கள், கொண்டாட்டங்கள், என அடுக்கிக் கொண்டே போகலாம்.
நான்கு தலைமுறைகள் கண்ட வீடு.
என் மகனைக் கூட என் மனைவி பிரசவம் முடிந்து நான்காம் மாதம் இந்த வீட்டுக்குத் தான் தூக்கி கொண்டு வந்தாள்.
இதோ ,இந்த நடுக்கூடத்தில் தான் அம்மா அவனுக்குத் தொட்டில் கட்டி அவனை ,என் மனைவியுடன் நான் வந்து மும்பை அழைத்துப் போகும் வரையிலும், தினமும் தாலாட்டுப் பாடி உறங்கச் செய்து மகிழ்ந்தாள்.
மூன்று அடுக்கு மாளிகை வீடு என்று தான் ஊர் அடையாளம் காட்டியது எங்கள் வீட்டை.
நாங்கள் மூன்று அண்ணன் தம்பிகள்.
100 வருஷ பழைய வீட்டை இடிக்க வேண்டும் என்று
அதிகாரிகள் சொல்லியதால் என் அண்ணன் மகன், அடுத்த ஊரில் இருப்பவன், கடிதம் போட்டு என்னை வரவழைத்தான்.
என் அண்ணனும் தம்பியும் விற்கும் பொறுப்பை என்னிடம் நம்பி விட்டு விட்டார்கள்.
விலை.குதிர்ந்து
முழுப் பணமும் வந்துவிட்டது.பாகப் பிரிவினை செய்யாத வீட்டை விற்ற பணம் மூன்று சகோதரர்கள் வங்கி கணக்கிற்கு மாறிவிட்டது.
இப்பொழுது பாகம் பிரிந்துவிட்டது. சொந்தங்களும் பிரிந்து விட்டன.
சொந்த பந்தங்களை நம்மை அறியாமல் நம்முடன் கட்டிப் போட்டிருந்தது இந்த வீடு தானோ?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன