கஸ்தூரி குருசாமி/நீங்கா நினைவுகள்

தியாகராஜன் செட்டியார் தன் பேத்தி சாலாவுடன் அவரது சொந்த ஊரான தேவகோட்டை நோக்கிப் பயணம் செய்கிறார்.
” தாத்தா இனி எவ்வளவு தூரம்?”
“அரை மணி நேரத்தில் போய்விடுவோம். அமெரிக்காவில் அழகழகான கட்டடங்களைப் பார்த்த நீ இதை விரும்பிப் பார்க்க வருவது ஆச்சரியமாய் இருக்கிறது.”
தியாகராஜன் செட்டியாரின் மகன் விஸ்வநாதன் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் படித்துப் பின் மேற்படிப்புக்காக அமெரிக்க சென்றவர், அங்கேயே வேலை பார்க்கிறார்.
தியாகராஜன் செட்டியார் மனைவி விசாலாட்சி இறந்து பின் தனிமையை விரும்பாத அவர் மகனோடு அமெரிக்கா போய் இன்று 10 வருடங்கள் ஆயிற்று . மனைவியின் பெயரைச் சுருக்கி சாலா எனப் பேத்திக்குப் பெயர் வைத்தார். இன்று அவள் வளர்ந்து வேலை பார்க்கிறாள். ரொம்ப பிடிவாதம் பிடித்துத் தாத்தாவுடன் தேவகோட்டை வந்திருக்கிறாள்.வீட்டின் முன் கார் நின்றதும் துள்ளி குதித்து இறங்கி உள்ளே
சென்றாள்.அமெரிக்காவில் வெறும் மரத்தாலான கட்டடங்களையே பார்த்த அவளுக்கு இக்கட்டத்தின் தோற்றமே மனதில் ஒரு துள்ளல் ஏற்படுத்தியது. “இந்த தூசிஉனக்கு ஒத்துக்காது போலாம்” என்றார். ” உங்களுக்கு வயசான பின் சுகர், ரத்த கொதிப்பு எல்லாம் வந்தபோது சிகிச்சை எடுத்தீர்களே? வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கு தானே!ஆசை ஆசையாய் கட்டிய இந்த வீட்டிற்கு பராமரிப்பே செய்யாது சாக விடுவது சரியா?பழைய கட்டடத்தைப் பராமரிக்காமல் போட்டு விட்டீர்களே! எத்தனை நல்ல விஷயங்களை இந்த வீடு சுமக்கிறது. இதன் ஊஞ்சல் ஆயிரம் கதைகள் சொல்லுமே!பாட்டி மடியில் படுத்து ஊஞ்சலாடியது இன்றும் எனக்கு மறக்கவில்லை.உனக்கு வைத்தியம் பார்ப்பது போல் நான் கட்டிடத்திற்கு வைத்தியம் பார்ப்பேன். பாட்டியின் பெயரின் பாதி தானே நான்.இது என் கடமை” என்றவளை வியப்புடன் பார்த்தார். மனைவியோடு வாழ்ந்த அந்த வீட்டைப் பார்த்துச் சுயநலத்துக்காக அமெரிக்கா சென்ற முட்டாள்தனத்தை எண்ணி வெட்கப்பட்டார்.நம் பாரம்பரியம், உறவு, நினைவுகள் தான் விலைமதிப்பற்றன என உணர்த்திய பேத்தியை ஆரத்தழுவி கொண்டார்

One Comment on “கஸ்தூரி குருசாமி/நீங்கா நினைவுகள்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன