மரு.ச.கந்தசாமி/அரண்மனை வீடு

எட்டுப்பட்டி கிராமத்திற்கும் இமயமாய் உயர்ந்து நிற்கும் வீடு கல்லுப்பட்டியின் அரண்மனை வீடு. பரம்பரை பரம்பரையாக ஜமீன் வாரிசுகள் வாழ்ந்த வீடு. அது வீடு அல்ல அரண்மனை தான், எண்ண ஆரம்பித்தால் எத்தனை கதவுகள், எத்தனை ஜன்னல்கள் என்று எண்ண முடியாது. வீட்டின் அதிசயமே அதன் இரண்டடுக்கு மாடி. மேலே ஏறினால் எட்டுப்பட்டி கிராமும் தெரியும். அந்த அரண்மனையில் கடைசியாய் வாழ்ந்த ஜமீன் மாணிக்கம், பெயருக்கேற்றார் போல மனிதருள் மாணிக்கம். தினமும் அவர் வீட்டில் கல்யாண களை தான். வந்த விருந்தினர் அனைவருக்கும் விருந்து தான்.அவரின் மனைவி முத்துலட்சுமி ஜாடிக்கேத்த மூடி, யார் வீடு தேடி வந்தாலும் கை நனையாமல் அனுப்புவதில்லை.
ஜமீன்தார் எப்போதும் ஊர் மக்களிடம் “நாம் என்ன கொண்டு வந்தோம், என்ன கொண்டு செல்லப் போகிறோம்? இருக்கும் வரை பிறருக்கு உதவுவதே நம் கடமை” என்பார். அவர் செய்த புண்ணியத்தால் அவர் பிள்ளைகள் எல்லாம் படித்து வெளிநாடு சென்று விட்டனர். ஜமீன் பிள்ளைகளளை ஊருக்கு அழைத்தால் “ஏன் அப்பா அந்தப் பட்டிக்காட்டில் நாங்கள் வந்து தங்குவதா?” என்று கேட்டு வர மறுத்தனர். காலம் சூழல, ஜமீனும், மனைவி முத்துலட்சுமியும் மறைய அரண்மனை வீடு அம்போ என்று எலும்புகூடாகக் காட்சி தருகிறது. சில பறவைகளும், பூனைகளும் அந்த வீட்டில் தஞ்சம் புக, கேட்பாரற்று நிலையில் அரண்மனை வீடு ஆள் இல்லாமல் அனாதை ஆனது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன