அழகியசிங்கர்/அந்த வீடு

ஒவ்வொரு முறையும் திருஇந்தளூர் வரும்போது, பாழடைந்த அந்த வீட்டைப் பார்க்காமல் போவதில்லை.
என் நண்பர் இலக்கிய உலகில் பிரபலமானவர். அவர் வாழ்ந்த வீடு.
அந்த வீட்டைப் பற்றி நிறையா கவிதைகள் எழுதி உள்ளார்.
அந்த வீடு ஏனோ விற்கவில்லை.
புதுப்பிக்கப்படவுமில்லை.
கவிஞரைச் சென்னையில் பார்த்தபோது,
‘நான் சாபம் கொடுத்து விட்டேன். அந்த வீடு விற்கக் கூடாது,’ என்று.
“ஏன்?”
“நான் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என் ஆன்மா இன்னும் அந்த வீட்டோடு இருக்கிறது,” என்றார்.

One Comment on “அழகியசிங்கர்/அந்த வீடு”

Comments are closed.