எஸ்.எல். நாணு/வீடு

“பேய் வீடு” திரைப்படத்தின் கடைசி நாள் ஷுட்டிங் முடிந்து பூசணிக்காயும் உடைத்துவிட்டார்கள்.
இன்னும் இரண்டு நாட்கள் காத்திருந்து எல்லாக் காட்சியும் ஷூட் பண்ணியாகிவிட்டது என்று உறுதிப்படுத்தப்பட்டபின் இந்த வீடு செட்டைக் கலைத்துவிடுவார்கள்.
ஆர்ட் டைரக்டர் வேலு வெளியிலிருந்து அந்த வீட்டையேப் பார்த்துக்கொண்டிருந்தார்…
கிராமத்திலிருக்கும் அவரது பூர்வீக வீட்டைப் போலவே இந்த வீடு செட்டை அமைத்திருந்தார். காட்சியமைப்புக்குத் தேவையானபடி கொஞ்சம் சிதிலமடைந்ததுபோல் உருவாக்கியிருந்தார்…
இன்னும் இரண்டு நாட்களில் இது இல்லாமல் போகப் போகிறது என்ற எண்ணமே அவருக்கு மனதில் வலியைத் தந்தது…
சொந்த வீடே இடிபடப்போவது போன்ற உணர்வு…
சொந்த வீடு??
அதுதான் இல்லாமல் போய்விட்டதே…
அவர் பிறந்து, தவழ்ந்து, நடந்து, அம்மாவின் பாசத்தில் நனைந்து, ஓடி விளையாடி வளர்ந்த அந்த வீடுதான் இப்போது அவர்வசம் இல்லையே…
மூத்தவர்கள் இரண்டுபேரும் அவரை ஏமாற்றி தங்களதாக்கிக்கொண்டு விட்டார்களே..
இப்போது அந்த வீடும் இல்லை உறவும் இல்லை…
அதே மாதிரி இந்த வீடும்…
நினைக்கும்போதே அவருடைய பார்வையை கண்ணீர் மறைத்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன