சசிகலா விஸ்வநாதன்/எதிர் பாராதது


அந்த பங்களாவின் முன் வாசலில் உள் பக்கமாக பெரிய பூட்டு தொங்கிக் கொண்டு இருந்தது.
பின்பக்கமாக போக நாலு பேர் முண்டா பனியனிலும் லுங்கியிலும் சீட்டாடி க்கொண்டிருந்தனர். பக்கத்தில் ஒருத்தன் பொட்டலம் மடித்துக் கொண்டிருந்தான். கஞ்சா வாசம் நாசியை துளைத்தது. வளைத்துப் பிடித்ததும் ஒருத்தன் சொன்னான். “நாங்க இதை வாடகைக்கு எடுத்திருக்கோம்.”
முன் பக்கத்திலிருந்து வந்த உரிமையாளர் பொன்னம்பல செட்டியார் சொன்னார்.” ஸார்! நான் யாருக்கும் வீட்டை வாடகைக்கு கொடுக்கவில்லை. இவர்கள் யாரென்றே எனக்குத் தெரியாது. பின்கட்டில் நாங்கள் புழங்குவதில்லை. பின்கட்டு பூட்டியே தான் இருக்கும்.” என்றார். ஆய்வாளர்,” அதெல்லாம் ஸ்டேஷனுக்கு வந்து டி.எஸ். பி யிடம் சொல்லுங்க. உங்க வீட்டிலே வைச்சு தான் கஞ்சா பிடிச்சுருக்கோம். உமக்குக் தெரியல்லைனா; எப்படி நம்புறது” என்று அவரையும் ஜீப்பில் ஏற்ற ஆச்சி என்ன நடக்கிறது; என்று புரியாமல். வாசல் தூணில் சரிந்தாள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன