எஸ்.எல். நாணு/ஆட்டு ஜோசியம்

சாதாரணமாக மனிதனின் அந்திம காலத்தை உணரும் சக்தி நாய்க்குத்தான் உண்டு என்று சொல்வார்கள்..
ஆனால் விசித்திரமாக ஆடாகிய எனக்கு அந்த சக்தி இருப்பது ஆச்சர்யமான விஷயம்தான்..
இத்தனை வருடங்கள் என்னை ஆசையாய் வளர்த்து இப்போது வறுமையின் காரணமாக விற்க சந்தைக்கு இழுத்துக்கொண்டு போகிறாளே கிழவி..
அவளுக்கு இன்னும் சில மணி நேரங்கள்தான் வாழ்வு என்று என் உள்ளுணர்வு சொல்கிறது..
இது தெரியாமல் என்னை இழுத்துக்கொண்டு போகிறாள்..
சந்தையில் நிச்சயம் நான் நல்ல தொகைக்கு விலை போவேன்..
கொஞ்சம் புஷ்டியாக இருக்கும் என்னை வாங்க நிறையபேர் முன்வருவார்கள்..
நான் யாருடைய கத்திக்கு பலியாகப் போகிறேன்.. யார் என்னுடைய கால்களை சூப்பாக்கி உறிஞ்சுவார்கள்.. யார் என்னை பிரியாணியாக ருசிப்பார்கள் என்று எனக்குத் தெரியாது..
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரியும்..
என்னை விற்ற காசுதான் கிழவியின் அந்திம சடங்கிற்கு உபயோகப்படப் போகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன