சந்தியா ஷங்கர்/”என்னோட ஆட்டுக்குட்டி”

“அம்மா!! அம்மா!! ம்மே!”

“என்னடி ம்மே ம்மே ன்னு கத்தற? ஒண்ணு அம்மான்னு கூப்புடு.. இல்ல மம்மி ன்னு. அதையெல்லாம் விட்டு அதென்ன ம்மே?”
பொரிந்தாள் கனகதுர்கா..

சாம்பவி.. கனகதுர்காவின் செல்லமகள். அவளுக்கு எப்பவும் ஆடு, கன்னுகுட்டி, கோழிக்குஞ்சு இதையெல்லாம் பாத்தா தன்னை அதுபோல கற்பனை பண்ணிப்பாள். அதே மாதிரி சத்தம் குடுத்து ரசிப்பாள்.

அம்மா கனகதுர்கா முதலில் ரசித்தாலும் போக போக விசித்திரமாக இருந்தது. நம்ம பொண்ணு சாம்பவிக்கு கிறுக்கோ என்று நினத்து டாக்டரிடம் காட்ட நினைத்தாள்.

டாக்டர் ஆரோக்கியசாமி அவளை பரிசோதனை பண்ணிவிட்டு கனகதுர்காவிடம் “வீட்டில யேதேனும், ஆடு, மாடு கோழிகள் இருந்தால் முதலில் அவைகளை உங்க பொண்ணு சாம்பவி கிட்டேர்ந்து விலக்கி வைய்யுங்க.”

இது ஒருவித மனோ வியாதி. இவங்களுக்கு தானும் அதே மாதிரி இனம். அதுனால அந்த மாதிரி குரலில் பேசினா அதுகளுக்கு புரியும் ன்னு நினைச்சு பேசுவாங்க.”

அதுங்க கிட்டேர்ந்து பிரிஞ்சா உங்க பொண்ணு குணமாயிடுவா பாருங்க” என்று சொல்லி சில மருந்துகள் எழுதி குடுத்தார்.

வீட்டிற்கு வந்து சாம்பவி தூங்கியதும் முதலில் ஆட்டு குட்டியை தனது மதனி வீட்டில் விட கொண்டு போனாள்.

“ம்மே!! ம்மே!!! மம்மி!! என்ன சாம்பவிகிட்டேந்து பிரிக்காதீங்க.. அவ போனஜன்மத்தில என்னோட முறை பொண்ணு.. போன ஜன்மத்தில் சேர முடியல. இந்த ஜன்மத்திலாவது ஒண்ணா இருக்கலாம்னு நினைச்சா!!”

“எங்கள பிரிக்காதீங்க அம்மா!! என்று அந்த ஆட்டுக்குட்டி பேசியதும் கனகதுர்கா மயங்கி விழுந்தாள்.

3 Comments on “சந்தியா ஷங்கர்/”என்னோட ஆட்டுக்குட்டி””

  1. கடைசி முடிவைப் படிச்சதும் சிரிப்பு தாளலை. விட்டலாச்சார்யா படத்துல கிளி பேசும், குதிரை டேன்ஸ் ஆடும். அந்த மாதிரி உங்க கதையில ஆடு பேசறது. அதுவும் ரொமான்ஸ் வேற….படத்துக்குப் பொருத்தமா இருக்குமா. வாழ்த்துகள்.

  2. செமயா இருக்கு சந்தியா.
    வித்தியாசமான கற்பனை.
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

Comments are closed.