சசிகலா விஸ்வநாதன்/என்பாவே என் என்பாவே


🌸
(1)
குச்சு வீட்டில் இருந்த என்னை,
மச்சு வீட்டில் ஏத்தி விட்டுன்,
உச்சி முகர்ந்து பார்க்கையிலே ; ஐயே!
என்பாவே என் என்பாவே!
🌸
(2)
எள்ளல் பேச்சை தள்ளி விட்டு
உள்ளம் உள்ளி மள்ளம் கொண்டு
மலையேறி நிற்கும் உன்னை; ஐயே!
என்பாவே என் என்பாவே!
🌸
(3)
தேசம் விட்டு தேசம் வந்து
நேசம் பாசம் நெஞ்சில் வைத்து
ஆசையாக கொஞ்சும் உன்னை; ஐயே!
என்பாவே என் என்பாவே!
(4)
ஏர் பிடித்த உழவன் உன்
கை பிடித்து கூட நிற்கும்
பார் போற்ற வாழும் மங்கை
என்பாவே என் என்பாவே
🌸
(5)
அடுத்த முறை வரும்போது என்று;
எடுத்து நீ பேச; இன்றே
அடுத்த முறை வந்ததின்று; மகனே!
என்பாவே! என் என்பாவே!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன