
“என்ன பொன்னம்மா.. ஆட்டை ஓட்டிக்கிட்டு கையில மஞ்ச பையையும் தூக்கிட்டு கிளம்பிட்டியே? சந்தையில விக்கப் போறியா?”
எதிர்ப்பட்ட ராசம்மா கேட்டாள்.
“சந்தைக்குத் தான்.. ஆனா ஆட்டை விக்கப் போகல..”
“பிறகு?”
“மளிகைக்கடை முனுசாமி ஆட்டை கொண்டு வரச் சொன்னாரு..”
“மளிகைக்கடைக்கு எதுக்கு?”
“அவரு வீட்டுக்காரம்மாவுக்கு வாயெல்லாம் புண்ணா இருக்காம்.. அதுக்கு ஆட்டுப்பால் நல்லதுன்னு ஒரு சித்த வைத்தியர் சொன்னாராம்..”
“அதுக்கு ஆட்டை ஏன் கூட்டிட்டு போகணும்? பாலை நீயே கறந்து எடுத்துப் போக வேண்டியது தானே?”
“அப்படிச் செய்யக் கூடாதாம்.. ஆட்டுக் காம்பில இருந்து நேரா அந்தம்மா வாயில பீச்சி அடிக்கணுமாம்”
“ஓ..”
“என்ன செய்றது? நோய் குணமாகனும்னா முதல்ல வைத்தியர் சொல்றதை நம்பி, அவரு சொன்னபடி செய்ய வேண்டியிருக்கே”
என்றபடியே நடந்தாள் பொன்னம்மா.
