கலித்தொகை சங்ககால தமிழிலக்கியத்தில் எட்டுத்தொகை நூல்களில் ஆறாவது ஆகும்.

பல புலவர்களின் 150 செய்யுள்கள் அடங்கியுள்ள நூலாகும் இது.
இப்பாடல்கள் மூலம் பண்டைக்கால ஒழுக்க
வழக்கங்கள்,நிகழ்ச்சிகள்,மரபுகள்,காலத்தின் தன்மை,
நல்லவர், தீயவர் ,பண்புகள்,விலங்குகள்,பறவைகள்,மரங்கள்,செடி கொடிகள்
பற்றி அறிந்து கொள்ளலாம்.
கலித்தொகை யிலிருந்து ஒரு பாடல்
கற்பித்தான் நெஞ்சு அழுங்கப் பகர்ந்து உண்ணான், விச்சைக்கண்
தப்பித்தான் பொருளேபோல், தமியவே தேயுமால்,
ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான்; மற்று அவன்
எச்சத்துள் ஆயினும், அஃது எறியாது விடாதே காண்
கல்வி கற்பித்தவன் நெஞ்சம் வருந்துமாறு உணவுப் பொருள்களை ஆசிரியனுக்கு
வழங்காதவன் தானே தேய்ந்துபோவான்.
கற்ற வித்தையைச் சொல்லித்தரும் ஒருவன் தப்புத் தப்பாகக் கற்பித்துவிட்டு
மாணவனிடம் பெற்ற செல்வம் தானே தேய்ந்துபோகும்.
வறுமைக் காலத்தில் உதவியவனுக்குத் திரும்ப உதவாதவன் தானே அழிந்துபோவான்.
அவனை அது தாக்காவிட்டாலும் அவன் எச்சமாகிய அவன் பிள்ளைகளையாவது தாக்கியே தீரும்.
-
