
மாமனும் மருகனும் போலும் அன்பின
காமனும் சாமனும் கலந்த காட்சிய
பூமனும் அரிசிப்புல் ஆர்ந்த மோட்டின
தாமினும் அமைந்துதம் தொழிலின் மிக்கவே
காமன் – என்ற பதத்திற்கு கண்ணபிரானுக்கு ருக்மணியிடம் தோன்றிய
மையல் என்று பொருள் கொள்ளலாம்.
சாம்பன் – இவன் கண்ணபிரானுக்கு சாம்பவதியிடமாகத் தோற்றிய
பூமன் – அரசன், பிரமன் (தனிப்பா 2)
செறி – செறிவான சிறந்த நெருக்கம் …மோடு – வயிறு …..பூமன் – பூக்கள்
உழவுத் தொழிலுக்கு கூட்டம் கூட்டமாக நின்ற-சிறந்த வலிமை மிக்க
எருதுகளைப் பார்க்கும்போது எப்படித் தோன்றியதாம் – பூக்களையும், பசும்
புற்களையும் தின்று நிறைந்த வயிற்றோடு வலிமைமிக நின்ற எருதுக்
கூட்டம் என்பதாக.
