ப்ரார்த்தனை/ஷைலஜா

.


“மரியா ! பைத்தியக்கார ஆஸ்பத்திரி நெருப்பு புடிச்சுகிச்சி.ஒரேபதட்டமா இருக்கு “
போனில் சகநர்ஸ் காந்திமதி சொன்னதும் மரியாவுக்கு நெஞ்சு துடித்தது.

சாலை விபத்தில் அவளது இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டு நான்கு மாதமாய்வீட்டோடு படுக்கையில் கிடக்கிறாள்.

‘தெய்வமே! அந்த ஆறு பேரையும் காப்பாற்றி விடு. அவர்களுக்கு நெருப்பு என்றால் என்ன என்று கூட தெரியாது .வளர்ந்திருக்கிறார்களே தவிர மனநிலை சரியில்லாதவர்கள். பாவம் நான் இருந்தவரை அவர்களை என் குழந்தைகள் போல பார்த்துக் கொள்வேன்.மரியம்மா என்றும் மாரியம்மா என்றும் அழைப்பார்கள். இவர்களைப் பார்த்துக் கொள்வது மிகவும் கடினம்.
என்னுடைய பொறுமை அங்கு வேறு யாருக்கும் கிடையாது என்று தலைமை அதிகாரியே சொல்வார் .’

மரியா தன் மனதளவில் வேகமாக எழுந்து கொண்டாள்.அவர்கள் ஆறு பேரையும் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு தீப்பிடித்த கட்டிடத்திலிருந்து வெளியேற ஆரம்பித்தாள்.

கண்மூடியபடிஇடை விடாமல் பிரார்த்தனை செய்தாள்.

‘இவர்களைக் காப்பாத்து..காப்பாத்து..’

அரை மணிகழித்துகாந்திமதியிடமிருந்து போன் வந்தது. “மரியா! நீ எப்போதும் கவனித்துக் கொள்ளும் அந்த ஆறு பேரும் ஆஸ்பத்திரியில் தீப்பிடித்த நேரம் உன்னைப் பிரிந்திருந்த துக்கத்தில் யாருக்கும் தெரியாம ரூமைவிட்டுப்புறப்பட்டு ‘மரியாம்மா மாரியம்மா..’னு புலம்பிட்டு ஆஸ்பத்திரிக்கு வெளியில்வந்து நிக்கிறாங்க.”
என்றாள்.

‘தெய்வமே!என்ப்ரார்த்தனை
பலித்தது’ என்று இரு கரம் கூப்பிய மரியாவின் கண்களில் இருந்து நீர் வழிய ஆரம்பித்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன