எம். எல்.பிரபா/பருவ காலங்கள்

சரோஜா டீச்சர் பிற்பகல் கடைசி பாட வேளையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். டீச்சர்… டீச்சர்… என்றான் மணி. என்னப்பா, என்ன வேணும்? ஏதாவது சந்தேகமா? ஆமாம் டீச்சர். எல் நினோ… எல் நினோ.. அப்படின்னு எங்க அப்பா எதோ வீட்ல பேசிகிட்டு இருந்தாரு அப்படின்னா என்ன டீச்சர்? அப்புறம் வெயில் காலத்துல மிக அதிகமாக வெப்பநிலையும், மழைக் காலத்துல மிக பயங்கரமான மழை பெய்யும். ஊரே வெள்ளத்தில் மூழ்கிடும் அப்படின்னு எங்க அம்மா கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தார் டீச்சர். எனக்கு பயமா இருந்தது. அதுக்கு என்ன காரணம்? டீச்சர். ‘நாமதான்’ நான் ஒன்னும் பண்ணல டீச்சர். நான் உன்ன சொல்லல டா; நாம அப்படின்னா, மனிதர்களை பத்தி சொன்னேன் .இந்த கேலண்டர் பாத்தியா? இதுல ஒரு அம்மா கையில ஆறு மனிதர்களை வச்சிருக்காங்க இல்ல; அதுபோல இயற்கை அன்னையும் ஆறு பருவ காலங்களையும் தூக்கி சுமந்துகிட்டு இருக்காங்க. மக்கள் தொகை அதிகமாயிட்டே போகுது மனிதர்கள் இயற்கை அழிக்கிறாங்க. ‘ நாம இயற்கை அழிச்சா, அது நம்மை அழிச்சிரும்’. அதுக்கு என்ன டீச்சர் செய்யணும்? வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கணும். அப்பதான் நல்ல மழை, நல்ல காற்று எல்லாம் நமக்கு சீராக கிடைக்கும். பள்ளி மணி அடிக்கும் சத்தம் கேட்டது. குழந்தைகள் எல்லோரும் தங்கள் பையை தூக்கிக் கொண்டு வெளியே ஓடினார்கள். மணி, ‘நானும் எங்க வீட்டில இன்னைக்கு ஒரு மரம் நடுவேன்’ என்று எண்ணியபடியே வெளியே சென்றான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன