மரு.ச.கந்தசாமி/பெற்றால் தான் பிள்ளையா?

ராஜீவும் மேகலாவும் காதல் திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டனர். ஐந்து வருடங்கள் ஓடிவிட லைஃபில் செட்டில் ஆனாலும், குழந்தை பிளானிங் என முதலில் தள்ளிப் போட ,இப்போது அதுவே குறையாகி விட்டது .மேகலாவோ” ராஜீவ் நாம் ஐந்து குழந்தைகளாவது பெற்றுக் கொள்ள வேண்டும்” என்று ஆசையாய் அடம் பிடிப்பாள் .ராஜீவ் “,மேகி நீ எனக்கு குழந்தை, நான் உனக்கு குழந்தை, பின் எதற்கு கவலை”? என்று சமாளிப்பான். கடல் கடந்து வந்ததால் நம்மூரைப் போல யாரும் அவர்களை கேட்க ஆளில்லாததால் வேலைப்பளுவில் இருவரும் மறந்து போனார்கள். இன்று 10 வருடங்கள் ஆகிவிட, குழந்தையின்மை மேகலாவை வாட்ட ஆரம்பித்தது. அவர்கள் பார்க்காத மருத்துவர் இல்லை, செயற்கை கருத்தரிப்பு முறையிலும் மேகலாவுக்கு நாட்டம் இல்லை. எனவே மேகலா” ராஜிவ், நாம் இந்தியா சென்றுவிடலாம் .ஒன்று இரண்டு குழந்தைகளால் தத்தெடுத்துக் கொள்ளலாம் ” என்றாள். ராஜீவும் அமெரிக்க வாழ்க்கை பிடித்தாலும் மேகலாவுக்காக இந்தியா செல்ல சம்மதித்தான். இருவரும் இந்தியா வந்து முறைப்படி இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தனர் .மேகலா குழந்தைகளை தத்து எடுத்தாலும் தான் பெற்ற பிள்ளைகள் போல பார்த்து பார்த்து வளர்த்தாள். அவளது தாய்ப்பாசத்தை மிஞ்ச ஆளில்லை. அவளது பெற்றோரும் இதைக் கண்டு மகிழ்ந்து போனார்கள் .அமெரிக்க தொழிலை விட்டதால் இன்று மேகலாவும் ராஜீவும் ஒரு பள்ளியை ஆரம்பித்து சிறப்பாக நடத்தி வருகிறார்கள். மேகலா இன்று பல குழந்தைகளின் தலைமை ஆசிரியை ,ஆனால் எல்லோரையும் தான் பெற்ற பிள்ளைகள் போல பாவித்து அன்பு பாராட்டினாள். ராஜீவும் மேகலாவின் பாசத்தில் திளைத்து போனான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன