ஜெ.பாஸ்கரன்/பொம்மைகள்

மீராவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

நீல நிற ஜீன்ஸ், வெளிர்ப் பச்சையில் பல வண்ணப் புள்ளிகள் போட்ட மேல் சட்டை, குட்டை முடி, கண்களில் துறுதுறுப்பு – கைகளில் ஆறேழு பொம்மைகள்.

அந்தக் கடையில் தேடித் தேடி, ஒரே அளவில் பல வண்ணத்தில் பொம்மைகளை வாங்கியிருந்தாள். மீசையில்லாமல் ஒன்று, தாடி வைத்து ஒன்று, கருப்பாக மீசையுடன் ஒன்று, சப்பை மூக்குடன் சிவப்பாக் ஒன்று என வகை வகையான பொம்மைகள். அட, மனிதர்களில் இத்தனை நிறங்களா?

‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற தலைப்பில் தன் வீட்டு ‘ஷோ கேஸீ’ல் அவற்றை அலங்காரமாக வைக்க அவளுக்கு ஆசை. ஆனால் கையிலேயே ஆளுக்கொரு திசையைப் பார்த்தபடி நின்றிருந்தன பொம்மைகள் – இந்தப் பொம்மைகளை எப்படி, எந்த வகையில் வைப்பது என அவளுக்குப் புரியவில்லை.

பல வகையான பீடங்கள், சின்ன அலமாரிகள் என எதுவும் மனதிற்குப் பிடிக்கவில்லை. அந்தக் கடையின் மூலையில் பலகை ஒன்றில் வரையப்பட்டிருந்த ஓவியம் ஒன்று அவள் கண்ணில் பட்டது. பல வண்ணப் பெயிண்ட் பூச்சில் இருந்த அந்த ஓவியத்தை வாங்கி, வண்ணத்திற்கு ஒன்றாக பொம்மைகளை வைத்துவிட முடிவு செய்தாள்!

பலகையில் அழகாக இருந்தது, ‘இந்தியா’வின் வரைபடம்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன