வாய்ச் சொல்லில் வீரரடி/ஹரணி

(1)

சிரிப்பார் சிரிப்பில் எள்ளல் இருக்கும்
பேச்சில் நடிப்பு துள்ளும் பெருங்கேடு
எண்ணியே பெரும்பொழுது கழிப்பர்
வாய்ச் சொல்லில் வீரரடி.
(2)
அகம்பாவம் ஆணவம் அறிவிலா நடத்தை
முகமெலாம் முள்ளாய்க் கல்லாய்ப் பண்பு
கழுவும் மீனிற்குக் கத்தியாய் இருப்பார்
வாய்ச் சொல்லில் வீரரடி.
(3)
வானத்தை விழுங்கிப் பூமியைக் குடிப்பேன்
நான் சொன்னால் நானிலம் நடுங்கும்
அவசரம் உதவுங்கள் என்றால் மறைவார்
வாய்ச் சொல்லில் வீரரடி.
(4)
எதற்கும் குற்றம் எதிலும் குறையே
எல்லாம் எனக்குத் தெரியும் என்பார்
ஆயிரம் பொய்யில் ஆலயம் கட்டுவார்
வாய்ச் சொல்லில் வீரரடி.
(5)
எங்கும் முன்னிற்பார் எதற்கும் உதவார்
துரும்பையும் நகர்த்த மாட்டார் தூசென்பார்
உப்பற்ற கெட்ட உணவு நாற்றமிவர்
வாய்ச் சொல்லில் வீரரடி.

தஞ்சாவூர்-

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன