
என்பா எழுதச் சொல்கிறார் அழகியசிங்கர்
நாலு வரியில்
எழுதி விடலாம்
பேசத் தெரிந்தவர்கள்
எல்லோரும் உண்மையில்
வாய்ச் சொல்லில் வீரரடி
2.
என்ன நடக்கப் போகிறது இப்போது
நாலு வரியில்
ஒருகவிதை அவ்வளவுதான்
உலகமே கவிழ்தாற்போல்
உழலாதீர்கள் நீங்கள்
வாய்ச் சொல்லில் வீரரடி
3.
நான் முதலில்
புத்தகம் படித்தேன்
சிறுகதை எழுதலாமென்று
எழுதிப் பார்த்தேன்
கவிதையும் வருமென்று
எனக்குத் தோன்றியது
வாய்ச் சொல்லில்
வீரனடி
⁹
