சசிகலா விஸ்வநாதன்/நான் மனிதி


பணிக்கு சேர்ந்த முதல் நாள் திருவாருலிருந்து மும்பை போயிருந்த சாவித்திரி கொஞ்சம் படபடப்பாகத்தான் உணர்ந்தாள்.
பக்கத்தில் இருந்த மாதவன்”பயப்படேண்டா டோ! எந்து வேணோமெங்கிலும் என்னோடு சோதிச்சோ.”ன்றதும் படபடப்பு கொஞ்சம் குறைந்தது. எதிர்த்த சீட் டிலிருந்த அனிருத் கன்னடாவில்”நிம்ம மனை எல்லி இத்தே? நாவு ஸஞ்ஜே ஜொதேயாகே பஸ் ஸ்டாப்கே ஹோகோணா” என்றதும், இவள் புரிந்தும் புரியாமலும், தலையை ஆட்டினாலும் நிறைவாக உணர்ந்தாள்.
இவளைவிட இரண்டு பங்கு உயரமாயிருந்த பல்பீர் சிங்” சலோ பஹன்! ஹம் சாய் பீனே கேலியே கேன்டின் தக் ஜாகர் லௌட்டேங்கே” என்றதும், இவள் புன்சிரிப்புடன் ” நாட் நௌ. வி வில் கோ அட் லெவன் தர்ட்டி” என்றதும் அவன் கட்டை விரல் காட்டி சமிஞை செய்தான். அவன் பக்கத்தில் இருந்தவன்” ஐ யாம் ஆஷுதோஷ் ஃப்ரம் கொல்கட்டா . ஐ வில் ஆல்சோ ஜாயின் யு” என்றதும்” இவளும் ” ஷ்யுர்” என்று கட்டைவிரல் உயர்த்தினாள். மும்முரமாக வேலையில் இறங்கின சமயம் இரண்டு சீட் தள்ளி இருந்த உமா, நீங்க என்ன ஆளுங்க? ” என்று தமிழில் கேட்டதும் சாவித்திரி புரியாமல் விழிக்க, உமா, “நீங்க என்ன ஜாதி?” என்று கேட்க அவளை ஒவ்வாமல் ஒரு பார்வை பார்த்து ” நான் மனிதி” என்று முறுவலித்தாள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன