சுஶ்ரீ/நெஞ்சு நிறைய சுமை

மார்த்தா திகைப்பில் இருந்தா. இப்படி அப்பா,அம்மா ரெண்டு பேரும் ஒரே நாளில் பரலோகப் பிராப்தி அடைவார்கள் என்று நினைச்சுக் கூட பாக்கலை.மைசூர்லயே பெரிய டிம்பர் மெர்ச்சன்ட் ராபர்ட்.எக்கச் சக்கமா சொத்து மட்டுமில்லை குழந்தைகளும் கூட. பெண் குழந்தை இல்லையே என ஏங்கிய ராபர்ட் தம்பதியருக்கு கடைசிக் குழந்தைதான் இந்த மார்த்தா.அப்பாவோட செல்லம்.

இத்தனை லாரிகள்,அதற்கு டிரைவர்கள்னு இருந்தும் அப்பா ஏன் லோட் ஏத்திட்டுப் போகணும்,அம்மாவையும் தன் பக்கத்தில் வைத்துக் கொண்டு லாரி ஓட்டறதுல என்ன சந்தோஷம் தெரியலை. மலைப்பாதைல எதிரில் கண்மூடித்தனமாய் வந்த காரைத் தவிர்க்க ஒதுங்க மலைச்சரிவில் லாரி கவிழ , முடிந்தது ராபர்ட் தம்பதிகளின் கதை.

சொத்து பூரா மார்த்தாவின் பேரில்னு உயில்.ஆறு சகோதரர்கள் இது வரை செல்லத் தங்கையை சீராட்டி பாராட்டினவர்கள்,ஒரே நாளில் எதிரியாகப் பார்த்தனர்.
இப்ப அன்புக்கு ஏங்கும் மார்த்தாவோட மனசு பூரா பாரம்,எப்படி சகோதரர்களின் அன்பை திரும்பப் பெறுவது,எப்படி பிரித்துக் கொடுத்தாலும் பணப்பேய் இவர்களை ஆட்டுவிக்காமல் விடாது.

நீங்களே ஏதாவது வழி சொல்லுங்களேன்,எனக்கு இந்த சுமை இறங்கினால் போதும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன