கரந்தை இந்து/திடீர் திருமணம்


“கண்ணா, நாம் இருவரும் உடனே கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று கேட்டாள் காவ்யா .
திடுக்கிட்டுப் போன கண்ணன் “ஏன் காவ்யா திடீரென இப்படி வந்து கேட்கிறே? உனக்கு என்னாச்சு இன்னிக்கு?”
“நீயும், நானும் ஸ்கூல் காலத்தில் இருந்தே பழகிக்கிட்டு இருக்கோம். நமக்குள் நிறைய விஷயங்களில் பெரும்பாலும் ஒத்த கருத்து இருக்கும். இப்போ ஒரே ஆபீஸில் வேலையும் பார்க்கிறோம். நம் இருவரின் நட்பு நம் வீட்டுக்கும் தெரியும் என்பதால் திருமணத்தில் பிரச்சினை இருக்காது”.
” எனக்கு நீ பேசுவது ஒண்ணும் புரியலை . நேரா விஷயத்திற்கு வா காவ்யா “
“நேற்று நாம் சேர்ந்து பார்த்த , நம் மனதை உலுக்கிய செய்தி நினைவில் இருக்கா கண்ணா?” .
” எது தெரியுமா? இரண்டு குடும்பங்கள் சேர்ந்து காரில் ஒரு திருவிழாவுக்குப் போய் விட்டுத் திரும்பி வரும் வழியில் நடந்த விபத்தில் முன்புறம் அமர்ந்து இருந்த இரண்டு பெற்றோர்களும் அந்த இடத்திலேயே இறந்து அந்த ஆறு குழந்தைகளும் அழுத காட்சியைப் பார்த்து நீ என்ன சொன்னே?.”
“கண் முன்பு பெற்றவர்கள் இறப்பைப் பார்த்துக் குழந்தைகள் எவ்வளவு பயந்திருக்கும். எனக்கு மட்டும் மணமாகி இருந்தால் என் மனைவி கிட்ட பேசிப் புரிய வைத்து இந்தக் குழந்தைகளை தத்தெடுத்து என் வீட்டுக்குக் கூட்டி வந்து இந்த சோகம் தெரியாமல் பாசமாக வளர்ப்பேன் ” என்றேன்.
” அது சரி, அதுக்கும் நீ இப்போ கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்பதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்க வாயெடுத்தவன் பாதியில் அப்படியே நிறுத்தி , ஏய் நிஜமா , உனக்கு சம்மதமா?” என்று ஆனந்தக் கூச்சலிட்டான்.
பிறகென்ன, இருவரும் வீட்டில் பேசி மணமுடித்து நேரே தத்தெடுக்கும் அலுவலகம் போனார்கள் அவசரமாக. அந்த ஆறு குழந்தைகளும் அவர்களும் மகிழ்ந்திரு

2 Comments on “கரந்தை இந்து/திடீர் திருமணம்”

Comments are closed.