ஆர்.ஸ்ரீனிவாசன்/நம் வாழ்க்கை நம்கையில்

கவிதை 1

அன்பினை விதைத்து அறநெறியில் நின்றிடின்
இன்பங்கள் தாமே எதிர்வந்து சூழ்ந்திடும்;
நம்பிக்கை தீபமாய் நாளும் ஒளிரட்டும் –
நம் வாழ்க்கை நம்கையில்.

கவிதை 2

உழைப்பொடு சேர்ந்த உயர்ந்த நற்சிந்தையே
விழிப்பொடு காக்கும் வினைகளின் செல்வமே;
ஒழுக்கம் துணையாக ஓங்கிடும் நாளெல்லாம் –
நம் வாழ்க்கை நம்கையில்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன