அ. கௌரி சங்கர்/நம்பிக்கை


குருவாயூர் ஊரிலில் இருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த கொத்துப்புழா என்ற கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலில் அன்று திருவிழா. பலவிதமான படையல்கள், ஊர்வலங்கள், ஆட்டம் பாட்டம் என்று கிராமமே பொங்கி வழிந்தது. பெண்களும் பெண் குழந்தைகளும் புத்தாடைகள் அணிந்தவண்ணம் மிடுக்காக வந்தவண்ணம் இருந்தார்கள்.
இவ்வளவு விமரிசையான கொண்டாட்டங்களுக்கு இடையில் மண்டபத்தின் ஓரத்தில் அமர்ந்து இருந்த பெண்ணையும் அவருடைய இரண்டு குழந்தைகளையும் பலர் கவனிக்க மறந்தனர்.
பெண்ணின் முகம் நம்பிக்கையை பிரதிபலித்தது. விடிகாலையில் இருந்து மதியம் ஒரு மணி வரை பசியோடு வந்து காத்திருப்பவர்கள் பட்டியலில் அவர்களுக்கு பிரதான இடம் இருந்தது.
சட்டென்று அன்னதான பட்டர் இரைந்து கூறினார் – சாப்பாடு முடிந்து விட்டது.
அப்போதும் அந்த பெண் நம்பிக்கையை இழக்கவில்லை. அந்த நம்பிக்கையின் பார்வை என்னை இழுத்தது. சில வினாடிகள் நிலைகுத்தி நின்றேன்.
அடுத்த நொடி, கையில் இருந்த தூக்கில் இருந்த பிரசாதத்தை அவளுக்கு தந்தேன். நிறைவோடு வீடு நோக்கி பயணமானேன்.

One Comment on “அ. கௌரி சங்கர்/நம்பிக்கை”

Comments are closed.