எம். எல்.பிரபா/மழை வெள்ளம்


நேற்றிலிருந்து மழை நிக்காம பேஞ்சிக்கிட்டே இருக்குது. ஆற்றில் இருந்து வெள்ளம் ஊருக்குள்ள வந்து கிராமமே முழுகிடுச்சு. வெளியே போகவே முடியல.வீட்டை சுத்தி தண்ணி தேங்கியது. கன்னியம்மா தன்னோட ரெண்டு பசங்களோட கூரை வீட்டுல கொஞ்சம் ஒழுகாத ஒரு மூலையில உட்கார்ந்து கொண்டிருந்தாள். பசங்களும் பயந்துகிட்டு, பசியோட உட்கார்ந்து கொண்டு இருந்தாங்க. அப்பத்தான் அவளுக்கு ஞாபகம் வந்தது.’நேத்து ஒரு சீப்பு வாழைப்பழத்தை பழுக்க வைக்க அரிசி பானையில் போட்டு வச்சிருந்தது.’ உடனே மெல்ல எழுந்து போய் அந்தப் பானைக்குள்ள இருந்து அந்த பழத்தை எடுத்துக் கொண்டு வந்து பசங்கள சாப்பிட சொன்னாள் .இந்த சமயத்துலதான், தன்னார்வலர்கள் படகு ஓட்டிக்கொண்டு வந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாரையும் படகுல ஏத்திக்கொண்டு சத்திரத்தில் தங்க வைப்பதற்காக அழைத்துக் கொண்டு சென்றார்கள். இவர்கள் வீட்டு முன்பும் படகு வந்து நின்றது .வாங்கம்மா வந்து ஏறிக்கோங்க என்றார்கள் .ஒரு துணிப்பையில் கன்னியம்மா தனக்கும் பசங்களுக்கும் மாற்றுத் துணியை எடுத்து வச்சுக்கிட்டு, பசங்கள அந்த வாழைப்பழத்தை கையில எடுத்துக்க சொன்னாள் .சின்ன பொண்ணு அந்த வாழைப்பழத்தை ஒரு கையில் வைத்துக்கொண்டு படகில் ஏறும் போது கை தவறி அது தண்ணீரில் விழுந்து அடித்துக் கொண்டே சென்றது. வருத்தத்துடன் படகிலே சென்று சத்திரத்திற்கு முன்பே இறங்கி உள்ளே சென்று ஒரு ஓரமாக உட்கார்ந்து கொண்டார்கள். கன்னியம்மாவும் அவ பசங்களும் பசி மயக்கத்தில் அப்படியே தூங்கி விட்டார்கள். திடீரென்று மூக்கில் வாசம் நுழைந்தது. கண்ணைத் திறந்த கன்னியம்மாவுக்கு ஒரே குஷி .தனக்கு முன்னே வாழை இலையில் சுட சுட சாம்பார் சாதமும் மூன்று வாழைப்பழமும் இருந்தது .கண்ணில் நீர் தழும்ப பசங்களோடு சேர்ந்து தானும் அதை சாப்பிட்டாள். இது ஊர் தலைவரின் உபயம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன