
அன்று
சென்னை புழல் ஜெயில் முன்பாக ஜனங்கள் திரண்டு நின்று கொண்டு இருந்தார்கள். கணவன் ஜெயிலில் மூன்று வருடங்களாக ஒரு சிறு குற்றத்திற்காக அடைபட்டுக்கொண்டு இருந்த மனைவியின் விடுதலையை எதிர்பார்த்து காத்து இருந்தான். அருகில் ஒரு மனைவி கணவனின் விடுதலையை எதிர்பார்த்து காத்து இருந்தாள்.
எங்கும் காத்திருப்பு மயம். அவர்களுடைய பல வருட பிரார்த்தனைகள் வீண்போகவில்லை. கோவில்கள், மசூதிகள் மற்றும் சர்ச்சுகளில் எதிரொலித்த பலரின் மனக்குரல்களுக்கு தெய்வங்கள் செவி சாய்த்தன.
நாட்டின் ஜனாதிபதி நாடு முழுவதும் அன்று முப்பது ஆயிரத்திற்கும் அதிகமான கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
ஜனங்கள் மத்தியில் ஒரு பெண் நின்று கொண்டு இருந்தாள். இரண்டு கைகளிலும் ஆறு பொம்மைகளை ஏந்திக்கொண்டு இருந்தாள். பல வருடங்களுக்கு முன்பாக அவளுடைய ஆறு பையன்களை சந்தேகத்தின் அடிப்படையில் வீட்டின் உரிமையாளரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டவர்கள் . அவளுக்கு நம்பிக்கை இருந்தது. அவர்களும் வருவார்கள் என்று.
கைதிகள் வரத்தொடங்கினர்.
இறுதியில் அவளுடைய ஐந்து பையன்கள் வளர்ந்து பெரியவர்களாகி இருந்த. நிலையில் அவள் முன்பு வந்தனர்.
நம்பிக்கையோடு இங்கும் அங்கும் ஆறாவது மகனை காணாமல் தேடிக்கொண்டு இருந்த தாய்க்கு “அவன் ஒரு வாரத்திற்கு முன்பு நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டான்” என்பதை எப்படி சொல்வது என்று வெளியில் வந்த ஐவரும் தவித்தனர்.
