வ வே சு
தூரலோடு ஆரம்பம்
தொடர்ந்தது ஜலதரங்கம்;
சில நிமிடச் செல்வாக்கில்
இடியுடன் கூடிய மழை
எங்கள் தெருவெங்கும்
தலைபின்னிக் கொண்டது;
பூ வைத்துக் கொண்டது.
இதனை இரசிக்க
சாளரம் அருகே
சாய்வு நாற்காலியில்
அமர்ந்து கொண்டு
நொறுக்குத் தீனியைக்
கொறிக்க ஆரம்பித்தேன்.
மழை நின்றுவிட்டது.

அருமை…அருமை சிறப்பான ரசனை மிக்க விவரிப்பு
எஸ் வி வேணுகோபாலன்