
செஞ்சூரியன் ஜெயில்ல இருந்து இன்னிக்கு திரும்பி வரப் போறான்.அவன் மனைவி காற்றிடை ,மகள் சிவந்தி,மகன் வேளன் மூவரும் காத்திருக்காங்க. அவன் செயிலுக்கு போறப்ப இந்த இரட்டை பசங்களுக்கு 6 மாசம்.
குடும்பமே வேலை பாத்த தோட்டத்து ஆண்டை(முதலாளி) காற்றிடையை அறிவுறுத்தி அனுப்பியிருந்தார்,”அவனை சமாதானப் படுத்தி வேலைக்கு கூட்டிட்டு வா,என் மேல கோவமா இருப்பான்.நல்ல சம்பளம் சிமன்ட் வீடு கொடுக்கேன்காரு ஆண்டைனு கூட்டியா.இந்தா ஒரு சீப்பு நாட்டு வாழை கொண்டு போ ஆசையா திம்பான்.”
எட்டு வருஷத்துக்கு முந்தின கதை,ஆண்டை அவரோட மச்சினி வித்யாவதி ஒத்துக்கலைண்டு அடிச்சு கொன்னுட்டார்.போலீஸ் மோப்பம் பிடிச்சு வந்திடுச்சு.அவசரமா செஞ்சூரியனைக் கூப்டு “டேய் போலீஸ் இப்ப வரும்,வாழைக்கா திருடினதுக்காக வித்யாம்மா என்னை மரத்துல கட்டி வச்சுது,சுள்ளெரும்பு கடி தாங்கலை.கட்டவுத்தவுடனே அவுகளை அடிச்சு கொன்னுட்டேண்டு சொல்லிரு. ஒரே மாசத்துல வெளியே கூட்டியாந்துடறேன்”
10 வருஷ தண்டனை. 8 வருஷத்துல விடுதலை. இன்னிக்கு ஆண்டை
தடுமாறி தோட்டத்து கிணத்துல விழுந்துட்டாருங்கனு கணவனிடம் காற்றிடை சொன்னா.குழந்தைகள் ஒரு சேர நிஜமாதான் நயினாண்டு ,பொய் சொல்லின.

