ஃபிராங்க் ஓ’ஹாரா/இலக்கிய சுயசரிதை


  • தமிழில் : க மோகனரங்கன்

நான் சிறுவனாக இருந்தபோது
பள்ளி மைதானத்தின்
ஒரு மூலையில் தனியாகவே விளையாடிக்கொண்டிருப்பேன்.
பொம்மைகளை எனக்குப் பிடிக்காது,
விளையாட்டுகளையும் வெறுத்தேன்; விலங்குகள் என்னிடம்
இணக்கமாக இருக்கவில்லை, பறவைகளோ பறந்து போயின.
யாராவது என்னைத் தேடினால்
ஒரு மரத்தின் பின்னால் மறைந்துகொண்டு
“நான் ஒரு அனாதை” என்று
உரக்கக் கத்துவேவேன்.
இங்கே இப்போது
அனைத்து அழகுகளின்
நடுவேயிருந்தபடி
இவ்விதமாகக் கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன்
என்பதை எண்ணிப் பாருங்கள்!
.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன