
அமலா ஒரு கல்லூரியில் படிக்கும் யுவதி. பாரதியின் சிந்தனைகளில் முழுவதுமாக ஊறியவள். ஆனால் அவளுடைய பெற்றோர்கள் எப்பொழுதும் அவள் மற்றவர்களுடன் பேசுவதை விரும்புவதில்லை. எப்படியோ கஷ்டப்பட்டு கல்லூரியில் மட்டும் சேர்ந்து விட்டாள். பட்டப் படிப்பில் இறுதி வகுப்ப்பில் படிக்கும் அவள் தன்னுடைய படிப்பை தொடர விரும்பினாள். நன்கு படித்து நல்ல வேலையில் அமர வேண்டும் என்பது அவளின் ஆசை. ஆனால் அவளுடைய பெற்றோர்கள்,’நீ விரைவில் படிப்பை முடித்துவிட்டு திருமணம் செய்து கொண்டு வாழ்வில் நிம்மதியாக இரு. எங்களையும் நிம்மதியாக இருக்க விடு’ என்று கட்டுப்பாடு விதித்தார்கள். கட்டுப்பாடுகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டு அவள் சென்னையை நோக்கி புறப்பட்டு விட்டாள். வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண்பது ஒன்றே அவளுடைய நோக்கமாக உள்ளது. காற்றையும் வயல்களையும் கடந்து அவள் விரைவாக நடக்கத் தொடங்கி விட்டாள். இனிமேல் அவளை தடுக்க யாராலும் முடியாது. ஏனென்றால் அவள் ஒரு பாரதியின் புதுமைப்பெண். அவளுடைய நியாயமான கோபம் எனக்குப் புரிகிறது. உங்களுக்கும் தானே?
