ஷைலஜா/காற்றுக்கென்ன வேலி

சிவப்பு கோட். வெள்ளை ஷால். காற்றில் பறக்க
நீல வானத்தின் கூந்தலாக பஞ்சு மேகம் மேலே படர்ந்ததைப்பார்த்தாள்.

‘வானுக்கும் என்னைப்போல
முகம் இல்லை.’

அவள் முணுமுணுத்தது காற்றினிலே கீதமாய் ஒலித்தது. ஒருகாலத்தில்.அந்தக்குரலை ரசித்து மணந்தவனின்குரூர முகம் கழுத்தில் தாலி ஏறிய பின்பு தான் தெரிந்தது

“பாடக் கூடாது.யாருடனும்பேசக்கூடாது”

வார்த்தை உளியால்அவள்முகத்தை சிதைத்து விட்டான்.

குயிலப் புடிச்சு கூண்டில் அடைச்சு..

கார்விபத்தில் அவன்போனதும்
3 வருஷம் கழித்து
அந்நியமண்ணிலிருந்து அவள் தனியாக வந்தாள்.

“நல்லகுடும்பப்பொண்ணா இருந்தா செத்துப்போன புருஷன் சொன்னபடி கேட்கணும்”அனாதையான அவளை வளர்ந்தவளின்இடக்கான வரவேற்பு..

வெளியுலகம் தேடி வந்தாள். யாருக்கும் அவளை அடையாளம் தெரியவில்லை. யாரும் அவளோடு பேசவில்லை.

கூந்தலை கலைத்த காற்று மட்டும் பேச ஆரம்பித்தது.

“நான் கூடத்தான் ஒருவர் பார்வைக்கும் தெரியவில்லை அதற்காக என் கடமையை செய்யாமல் இருக்கிறேனா? என் திறமையை ஆற்றலை பல சமயம் கோபத்தைக் கூட காட்டிக் கொண்டுதான் இருக்கிறேன்.என்னை வேலி போட்டு அடைக்க முடியுமா?பெண் என்பவள் ஊழிக்காற்றாய் சுழலணும்.வீழ்ந்துவிடாதே பெண்ணே!
உன் ஆற்றலில் மறைந்த முகம் மட்டுமல்ல வாழ்க்கையும் மீண்டும் வெளிச்சத்துக்கு வரும்.”

அவள் ஒரு முடிவோடு நிமிர்ந்து நடக்க ஆரம்பித்தபோது காற்று மெல்ல தலை கோதி விட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன