முனைவர் அ.எபநேசர் அருள் ராஜன்/காற்று சொன்ன சங்கதி

காற்று பலமாக வீசியதில் தீபாவின் கொண்டை அவிழ்ந்து பின்னோக்கிப் பறந்தது கூந்தல்.
ஏதோ ஒரு இறுக்கத்தில் இருந்து விடுபட்டு தலைமுதல் கால் வரை சிலிர்க்கச் செய்திருந்தது. ஆளுயரப் புற்கள் காற்றிலாடி அவள் கன்னத்தை வருடின. கண்ணீரைத் துடைத்தன. காற்று காதோரம் பேசியது. வாழ்க்கையில் புற்களைப் போல வளைந்து கொடுப்பதும் நல்லதுதான்
அதற்கு பெயர் அடிமைத்தனம் இல்லை என்றது. அதைக் கேட்ட தீபா வானத்து மேகங்கள் காற்றை எதிர்க்காமல் அதன் போக்கில் தம்மை இலகுவாய் நகர்த்திச் செல்வதைப் பார்த்தபடியே நின்றாள். அவள் கண்களில் அவளது ஆக்ரோசமும கோபமும் தணிந்திருந்தது.

-.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன