கரந்தை இந்து/பாட்டியின் ஆசை


    "அப்படி என்ன  இருக்கு  இந்த  பட்டிக்காட்டில்னு  இந்த  தள்ளாத  வயதில்  பிடிவாதமா என்னையும்  கூட்டிக்கிட்டு   டில்லியில்  இருந்து  இந்த  ஊருக்கு  வந்திருக்கே  பாட்டி"  என்று  வேண்டா  வெறுப்பாக  கோபமா  கேட்டாள்  பேத்தி  வர்ஷா .
   "சொல்றேன்டா கண்ணு,  முதலில் ஆட்டோ  பிடிச்சு  அந்த  கம்பர்  தெருவுக்குப்  போகலாம்  வா " என்றாள்  பாட்டி  கல்யாணி.
   அந்த  தெருக்  கோடியில்  ஒரு  பெரிய  வீடு  சிதிலமடைந்து  பார்க்கவே  பேய்  பங்களா  மாதிரி  தோற்றத்தில்  இருக்க , கல்யாணி  அதன் முன்  நின்று  கண்ணீர்  வழிந்தோட  அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
   "யார் வீடு இது ? ஏன் அழறீங்க? " என்று  கேள்வி  கேட்ட வர்ஷாவிடம்  , "நானும்  உன்  தாத்தாவும் ஒரு  காலத்தில் சந்தோஷமாக வாழ்ந்த  இடம். 
  "உன்  அப்பாவின்  படிப்புக்கு வாங்கிய  கடன்  அடைக்க  முடியலை.  வேறு  வழியின்றி வீட்டை வித்தார்  தாத்தா. நான்  சாகும் முன் கடைசியா ஒரு முறை  பார்க்கணும்னு  ஆசை. அதான்  வந்தேன் " என்றபடி  திரும்பிப்  பார்க்காமல்   நடந்தாள் கல்யாணி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன