சுஶ்ரீ/தென்றலே என்னை தீண்டாதே



டேய் கமலேஷ் என்னை விட்டு ஏண்டா போனே,ஷைலஜா கோவம் கலந்த கொஞ்சலோடு கேட்டாள். இந்த மாலை நேரங்களை நாம எவ்வளவு ரசிச்சிருக்கோம்.

”தென்றல் காற்றுன்னா இதுதான் உன் முகத்தை தொட்டு விளையாடி கன்னத்தை வருடிவிட்டு அப்பறம் என் கிட்ட வருது” கமலேஷ் காதோட சொன்ன வார்த்தைகள் நெஞ்சை குத்தியது.

விமானப் படையில் தேர்வாயிடுச்சுடி ஜம்முல போஸ்டிங். சீக்கிரம் வந்து கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போறேண்டானு பறந்துட்டான் அந்த அத்தை மகன் என் மனம் கவர்ந்த பாவி.

மூணு மாசம் ஆச்சு ஒரு தகவலும் இல்லை நான் மட்டுமா என் அத்தை ,மாமா, எல்லாரும் அவனுக்காக காத்திருக்கோம்,
அவனுக்கு புரியலையா நான் இங்கே தனியே தவிக்கிறேன்னு.

என் தவிப்பு புரியாமல் இந்த தென்றல் என் முகத்தை வருடி விட்டு தலை முடியை கலைத்து விட்டு மிதந்து போகுதே ஜம்மு வரை போகுமோ என் தவிப்பை கூறுமோ.
முடியாதெனில் தென்றலே இனி என்னை தீண்டாதே.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன