மரு.ச.கந்தசாமி/மீரா

மீரா கல்லூரியின் கனவு தேவதை .படிப்பிலும், விளையாட்டிலும் அழகிலும், நம்பர் 1. கல்லூரியில் அவளை சுற்றாத பாய்ஸே இல்லை. அவள் பெற்றோர் மீராவிடம்” மீரா உன் அழகுக்கும் படிப்புக்கும் ஏற்ற மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து கொள்” என்று வற்புறுத்தினர். மீராவோ “அம்மா நான் ஃபிரீ பர்ட் .எந்த கூட்டிலும் அடைபட விரும்பவில்லை .எனக்கு இந்த கல்யாணம் குழந்தைகள் ,எதிலும் இன்ட்ரஸ்ட் இல்லை”. என்றாள். அவளைச் சுற்றிய அவள் கல்லூரி மாணவர்களிடம் ரக்ஷாபந்தன் அன்று ராக்கி கட்டி கடுப்பட்டிப்பாள் .காட்சிகள் மாற ,மீரா இன்று அமெரிக்காவில் நாசாவில் டாப் சயின்டிஸ்ட். லக்சரி வாழ்க்கை ,தன் கனவு போல் அமைய இன்று வானில் தனித்து பறக்கும் அழகு புறா .வயசானாலும் அழகும் ஸ்டைலும் கொஞ்சம் கூட குறையவில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன