
“டேய் அழகா இருக்குடா இந்த படம்”
“ஆமா, எனக்கும் பிடிச்சிருக்கு”
“ஏஐ தானே?”
“ஹாஹா, ஏஐ மாதிரியே வரைஞ்சேன்”
“அட… பாரேன், பேக்கிரவுண்டு, புல்வெளி எல்லாமே செம்ம”
“ஆமாபா, நீ கூட வரையலாம்”
“எனக்கு வேணாமே அந்த ரிஸ்க், அதுசரி… ஏன் முகம் வரையலை?”
“அது இன்னும் யோசிக்க முடில”
“என்ன யோசிக்க முடில?”
“அது ஒரு அழகான, சாந்தமான, துள்ளலான முகம் யோசிச்சுட்டு இருக்கேன்”
“உன் நட்பு வட்டத்தில் இருக்காங்களா பாரேன், உதாரணமா என்னைபோல” என்று சொல்லிட்டு அலைபேசியில் தன்னையே பார்த்துக்கொண்டாள்.
“அழகா வேணும்னு சொன்னேனே, அப்படி யாரும் இல்லையே”
நின்றாள், முறைத்தாள், அந்தப்படத்தை வாங்கி கசக்கி அவன் மேல் எறிந்துவிட்டு வெளியேறினாள்.
