அர்ஜுனன்/ஆதரவு


அமெரிக்காவில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, உயர்ந்து கோடிக்கணக்கில் சம்பாதிப்பவள் சுஜா.
தமிழகத்தில் அவளது பெற்றோர் நினைவாக, ஆதரவற்றவர்களுக்கான கருணை இல்லம் ஒன்று தொடங்க நினைத்தாள்.
“குழந்தைகளுக்கான அனாதை இல்லமா?” எனக் கேட்டாள் தோழி.
“குழந்தைகளுக்கு அரசாங்கம் தொடங்கி, தனியார் தொண்டு நிறுவனங்கள்வரை நிறையவே நடக்கின்றன. எனது எண்ணமெல்லாம்… வயதானவர்களுக்கு… அதிலும் துணையற்ற ஆண்களுக்கு…”
“அது என்னடி… ஆண், பெண் பாகுபாடு?
“ஒரு வயதான பெண் துணையற்று இருந்தாலும், அவளது உழைப்பை கடைசிவரை உறிஞ்சுவதற்காக அவளது குழந்தைகள் கடைசிவரை பாதுகாப்பார்கள்… இல்லையென்றாலும் அவள் தன்னந்தனியே நின்று சமாளித்துக் கொள்வாள்…”
“ஓ…”
“ஆனால்… ஆண் வீட்டு வேலை செய்து பழக்கமில்லை என்பதால், வயதான பிறகு அவனுக்கு வருமானமும் இல்லையென்றால் அவனை வெறும் சுமையாக மட்டுமே பார்க்கின்றனர்”
“சரிதான்” என்றாள் தோழி.

One Comment on “அர்ஜுனன்/ஆதரவு”

Comments are closed.